Pollachi Rains| பொள்ளாச்சியை பொளந்து கட்டிய மழை - கோயிலையே சுத்துப்போட்ட பெருவெள்ளம்
பொள்ளாச்சியை பொளந்து கட்டிய மழை - கோயிலையே சுத்துப்போட்ட பெருவெள்ளம்
#pollachirains #pollachiflood கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சிற்றோடைகள் மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவிலுக்குச் செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கும் பணியில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
