

கோட்டாம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்ற கிருஷ்ணகுமார் அங்கிருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் நியாய விலை கடை ஊழியர் பணம் தர மறுத்ததால் கிருஷ்ணகுமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகுமாரை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்துவதற்காக காத்திருந்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு கிருஷ்ணகுமார் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை விரட்டி பிடித்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.