ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு - வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல்பெற முயற்சித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு - வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு
Published on

கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்தலைவராக பட்டியல் இனத்தை சேர்ந்த சரிதா என்பவர் உள்ளார். இவரை அலுவலக பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாக அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மீது எஸ்சி,எஸ்டிபிரிவு உள்ளிட்ட3 பிரிவுகளில் நெகமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சிபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்டத்தில்கீழ் தகவல்பெற, ஊராட்சி மன்றத்திற்கு பாலசுப்பிரமணியம் தொடர்ந்து கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சரிதாவின் கணவர், வீரமுத்து வீடுபுகுந்து பலசுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மகன் யோகேஷ் கொடுத்த புகாரின் பேரில் வீரமுத்து மீதும் நெகமம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவுசெய்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com