இட மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர் : ஆசிரியரை அனுப்ப மறுத்து கதறி அழுத மாணவர்கள்

பொள்ளாச்சி அருகே இடமாறுதலில் செல்லும் ஆசிரியரை அனுப்ப மறுத்து மாணவ, மாணவிகள் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இட மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர் : ஆசிரியரை அனுப்ப மறுத்து கதறி அழுத மாணவர்கள்
Published on
பொள்ளாச்சி அருகே இடமாறுதலில் செல்லும் ஆசிரியரை அனுப்ப மறுத்து மாணவ, மாணவிகள் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக செந்தில் என்பவர் சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். பதவி உயர்வு பெற்று அவர் தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்கிறார். இது குறித்து தகவல் அறிந்த மாணவ-மாணவிகள் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான செந்தில்குமார் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என கூறி, அவரை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இதனால் ஆசிரியர் செந்தில்குமார் திகைத்து நின்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com