பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்த அதிரடி - அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது சிபிஐ
பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், பாபு, கெரோன்பவுல் ஆகிய 2 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதோடு, கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து அருளானந்தம் நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
