பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் - பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் - பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு
Published on

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் கைதான மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில், 5 பேர் மீதும் ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com