சுவர் விளம்பரம் மூலம் களமிறங்கிய அரசியல் கட்சிகள் - அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பாலங்கள், சிறு சிறு தடுப்பு சுவர்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள், அழிக்கப்பட்டு வருகின்றன. திடீரென நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால் தற்போதே இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com