நடிகர் ராஜேஷின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி
உடல்நலக்குறைவால் காலமான நடிகர் ராஜேஷின் உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல், சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து, நடிகர் தியாகராஜன், பசுபதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story
