போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு - சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

சிதம்பரம் அருகே போலியோ சொட்டு மருத்து போடப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு - சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
Published on

கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் அலெக்சாண்டர் என்பவரது ஒரு வயது குழந்தை ஹரிஷுக்கு போலியோ சொட்டு மருத்து போடப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தை திடீரென மயக்கமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலியோ சொட்டு மருந்து போட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com