Tiruvallur | புகார் கொடுக்க வந்த கர்ப்பிணியை அடித்த காவலர் - தீயாய் பரவிய வீடியோவால் சஸ்பெண்ட்

x

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செல்போனில் ஆபாச மெசேஜ் செய்து தொல்லை கொடுத்தவர் மீது புகார் கொடுக்க நள்ளிரவில் வந்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பெண்களை, காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலரான ராமன் என்பவர் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், புகார் அளிக்க வந்த பெண்களை தாக்கிய காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவத்தின்போது பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்