சென்னை பட்டபிராம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், தொலை தொடர்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போது அந்நிறுவனத்தின் காவல்துறையிடம் தன் மீது எந்த வழக்குளும் இல்லை என சான்றிதழ் பெற்று வரும்படி தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினரின் அறிவுறுத்தல் படி, இணைய வாயிலாக ராஜேஷ் இந்த சான்றிதழை பெற போலீசாரின் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார். 3 படி நிலைகளை கொண்ட விண்ணப்பத்தில் சுயவிவரங்களை பதிவேற்றிய அவர், இரண்டாம் நிலையான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தி உள்ளார். ஆனால் 3 வது நிலையான சான்றிதழ் வழங்குதல் மட்டும் 3 மாதங்களாக நிறைவடையாமல் இருந்துள்ளது. இணைய வழியாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டும், பயனற்ற நிலை உள்ளதாக ராஜேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.