நடிகையிடம் கைவரிசையைக் காட்டிய போலீசுக்கு பாய்ந்த அதிரடி

x

ஓடும் ரயிலில் சின்னத்திரை துணை நடிகையிடம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைப் பையை திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தபோது காவலர் வசந்தகுமார், அவரது நகைகள் அடங்கிய கைப்பையை திருடியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பை அழகாக இருந்ததால் திருடியதாக காவலர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனிடையே, காவலர் வசந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்