``அந்த மனசுதான் சார் கடவுள்'' - கீழே கிடந்த நகைப்பையை போலீசில் ஒப்படைத்த பெண்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அரை புவுன் தோடு, கால் பவுன் மோதிரம் மற்றும் பணத்துடன் கண்டு எடுத்த பையை, போலீசில் ஒப்படைத்த லால்பேட்டை பேரூராட்சி பெண் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சீர்காழியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நத்தமலை கிராமத்திற்கு பைக்கில் சென்றபோது, தனது பையைத் தொலைந்து விட்டதாக, காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த சூழலில் காணாமல் போன இப்பையை, கண்டு எடுத்த பேரூராட்சி பணியாளரான பானு என்பவர் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையைப் பாராட்டிய, காவல் ஆய்வாளர் பானுவிற்கு, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
Next Story
