ஒற்றைக்கண் ஜெயபாலை சென்னை அருகே சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்த அரக்கோணத்தை சேர்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் என்பவரை, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஜெயபால், அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்கும் திட்டத்துடன், வெள்ளவேடு பகுதியில் ராபர்ட் என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று ஜெயபாலை கைது செய்து செய்து, பூந்தமல்லி சிறையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
