"தற்கொலைக்கு தூண்டிய போலீசார்" - பெண் வெளியிட்ட வீடியோ

"தற்கொலைக்கு தூண்டிய போலீசார்" - பெண் வெளியிட்ட வீடியோ
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆஷா புஷ்ரா நாகர்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நிறுவனத்தின் உரிமையாளருடன் ஆஷா நெருங்கி பழகி வந்த நிலையில் , அந்த நபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆஷா நெருக்கடி கொடுத்ததால் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாடகை வீட்டிலிருந்து உரிமையாளர் வெளியேற்றியதால் தாம் நிர்கதியாக்கப்பட்டதாகவும் ஆஷா தற்கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வடசேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த போது போலீசார் அவரை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆஷா, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com