கும்பகோணம் தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த தென்னரசு என்பவர் பட்டுக்கோட்டை காவர் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். கடந்த ஓராண்டாக தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். தென்னரசுவை மீண்டும் தாலுகா காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.