Chennai Police | "ஆடைகளை களைத்து தாக்கிய போலீஸ்.." - ஆட்டோ ஓட்டுநர், போலீசார் இடையே மோதல்..
"ஆடைகளை களைத்து தாக்கிய போலீஸ்.." - ஆட்டோ ஓட்டுநர், போலீசார் இடையே மோதல்..
Chennai Police | "ஆடைகளை களைத்து தாக்கிய போலீஸ்.." - ஆட்டோ ஓட்டுநர், போலீசார் இடையே மோதல்..
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி போலீசாரின் கையை கடித்ததாகவும், போலீசாரின் செல்போனை பறித்து உள்ளாடைக்குள் மறைத்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் தனது ஆடைகளை களைத்து தாக்கியதாக திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவத்தில் தலையிட்ட அவரது கர்ப்பிணி மகள் பவித்ராவும் காயமடைந்த நிலையில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
