போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - சாவில் சந்தேகம்

சென்னை, எம்.கே.பி நகர் காவல்நிலையத்திற்கு,விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - சாவில் சந்தேகம்
Published on

வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற அந்த இளைஞரை, கொலை வழக்கு விசாரணைக்காக எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையின்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறிய கார்த்திக்,மதிய உணவிற்கு பிறகு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸார் அவரை அழைத்துச் சென்றபோது. வழியிலேயே கார்த்திக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக கார்த்திக்கின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com