வீடு புகுந்து போலீஸ் SI-க்கு இரும்பு ராடால் அடி... ரத்தம் சொட்ட சொட்ட கொள்ளை கொடூரம்
புதுக்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.காவல் உதவி ஆய்வாளர் சுமையா பானுவின் வீட்டில் கடந்த 29ஆம் தேதி, 4 மர்மநபர்கள், அவரையும் கணவர் நாக சுந்தரத்தையும் இரும்பு ராடால் தாக்கி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக திருக்கோகரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். வீடு காட்டுப்பகுதியில் உள்ளதால், துப்பு கிடைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தம்பதி இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.
Next Story
