Police SI | ஒரு வாரத்தில் ஓய்வுபெற போகும் நிலையில் செய்த `சேட்டை’ - SI தலையில் இறங்கிய இடி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், செல்போனில் ஆபாசமாக பேசிய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளராக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னிடம் புகாரளிக்க வந்த சுஜாதா என்ற பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதால், ஆத்திரமடைந்த அப்பெண் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் தவறாக பேசிய சப் இன்ஸ்பெக்டர், உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com