Smuggling | Velankanni | மூட்டை மூட்டையாக பிடிபட்ட உயிருக்கே உலைவைக்கும் எமன் - அதிரவைக்கும் பின்னணி
நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமாக காரில் வந்த நால்வரிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் வேதாரண்யம் புஷ்பவனத்தைச் சேர்ந்த ரகுபாலன், தர்மபுரி மாவட்டம் அரூர் கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து, சேலம் ராஜ்குமார், தர்மபுரி விமல்ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த தகவலின் பேரில் பிரதாபராமபுரத்தில் மகாலிங்கம் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நால்வரையும் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சாவை அவர்கள் இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றது தெரியவந்தது. கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
