வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்லும்போது பணத்தை பறிமுதல் செய்த போலீஸ் - கலங்கி நின்ற பெண்

வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்லும்போது பணத்தை பறிமுதல் செய்த போலீஸ் - கலங்கி நின்ற பெண்

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுக்க வந்ததாக கூறிய தம்பதியரிடம் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.. விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மின்சார துறையில் பணியாற்றி வந்ததும், அவருக்கு சென்னைக்கு பணிமாறுதல் கிடைத்தால் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்காக தம்பதியை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, இன்று பணியில் சேர வேண்டும் என கூறிய அப்பெண் சோகத்துடன் பணி உத்தரவை அதிகாரிகளிடம் காண்பித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com