பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்ற தாய்-கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார்

வாணியம்பாடியில் பெற்ற குழந்தையை தாயே விற்ற சம்பவத்தில் குழந்தையை போலீசார் மீட்டதுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.
பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்ற தாய்-கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார்
Published on

வேலூர் வாணியம்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்த சத்யா 2 முறை திருமணம் செய்து கணவரை பிரிந்த நிலையில் 3வது முறையாக முருகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ரேணுகாதேவி என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் முருகன் காசநோயால் தர்மபுரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் தனது குழந்தை குறித்து கேட்டபோது தன்னுடைய பெரியம்மா வீட்டில் இருப்பதாக சத்யா கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த முருகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சத்யா, அவரின் பெரியம்மா கீதா மற்றும் அங்கிருந்த ஒரு பெண் கவிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் சத்யா தனது ஒரு வயது குழந்தை ஆதித்யாவை பெங்களூருவில் உள்ள தம்பதிக்கு விற்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றதாகவும் முன் பணமாக 65 ஆயிரம் தொகை பெற்றதாகவும் தெரிய வந்தது. இதனிடையே குழந்தையை வாங்கிய தம்பதி கிருஷ்ணகிரியில் இருப்பதாக தகவல் கிடைக்கவே, அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு தம்பதியினரையும் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com