தெய்வச்செயல், முதல் மனைவியிடம் போலீசார் விசாரணை

x

கல்லூரி மாணவி புகாரில் தெய்வச்செயல் மற்றும் அவரது முதல் மனைவி கனிமொழியிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரை சேர்ந்தவர் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச் செயல். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கனிமொழி என்கிற மனைவி உள்ள நிலையில்,கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்து கொடுமை செய்ததாக மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்ற தெய்வசெயல் தலைமறைவாக இருந்த நிலையில், தெய்வ செயல் மற்றும் அவரது முதல் மனைவி கனிமொழி இருவரிடமும் வாலாஜா பகுதியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்