தொடர் போராட்டத்தை தொடர்ந்து ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு

நடிகர் ரஜினிக்கு எதிரான தொடர் போராட்டங்கள் காரணமாக அவரது போயஸ் கார்டன் இல்லத்தை சுற்றிலும் போ​லீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தை தொடர்ந்து ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு
Published on

பெரியார் பற்றி துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதால் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த ரஜினிகாந்த், பெரியார் பற்ற தாம் பேசிய கருத்துக்கள், பத்திரிகையில் செய்தியாக வெளி வந்தவை என்றும், அதனால் ஒரு போதும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், ரஜினிக்கு எதிரான தொடர் போராட்டங்கள் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு போ​லீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினியின் வீடு அமைந்துள்ள சாலையில் வசிப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும் என போலீசார் கெடுபிடி செய்து வருவதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com