ஊரே வேடிக்கை பார்க்க பூசாரியை குடும்பத்துடன் கடுமையாக தாக்கிய போலீஸ்

x

சிவகங்கை அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கோவில் பூசாரி ஒருவரை காவலரின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பிரபு என்பவர் தனது காரை அரண்மனைவாசல் பகுதியில் உள்ள உணவகம் அருகே நிறுத்த முயன்றுள்ளார். அப்போது சங்குமணி என்ற கோவில் பூசாரி தனது காரை நிறுத்தியபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காவலர் பிரபு சங்குமணியை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் காவலர் பிரபுவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்