போதையில் பழுதான படகில் சென்று தத்தளித்த காவலர்கள் - சேலத்தில் அதிர்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, ஏரியில் செல்பி எடுக்க மது போதையில் பழுதான படகில் சென்ற மூன்று காவலர்கள் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டேனிஷ்பேட்டை கோட்டேரியில் உள்ள தும்பிப்பாடி கவின்குமார், ஆண்டிக்கொட்டாய் முருகன், தீவட்டிப்பட்டி அண்ணாதுரை ஆகியோர் காவலர்களாக உள்ள நிலையில், இம்மூவரும் பழுதான படகில் ஏரியின் மையத்திற்கு சென்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது படகுக்குள் தண்ணீர் புகுந்து, ஏரியில் கவிழ்ந்ததால் மூவரும் தத்தளித்தனர். இதையறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மூவரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
