தற்கொலைக்கு தூண்டுவதாக காவலர் குமுறல் - ஆயுதப்படைக்கு மாற்றம்
சிவகங்கை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் பாலமுரளி கிருஷ்ணா இது தொடர்பாக ஆடியோ ஒன்றை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் சார்பு ஆய்வாளர் செல்வபிரபு, சாதி ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும் , அதிக பணிச்சுமை கொடுத்து மன உழைச்சலுக்கு ஆளாக்குவதாக தெரித்துள்ளார். தான் தற்கொலை செய்து கொண்டால் சார்பு ஆய்வாளர் தான் காரணம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக இருவரையும் நேரில் அழைத்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிபாளர், சார்பு ஆய்வாளர் செல்வபிரபு மற்றும் பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
