போலீஸ் ஸ்டேஷனில் இளைஞரை கன்னத்தில் அறைந்து பயங்கரமாக தாக்கிய போலீசார்?

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே, இளைஞரை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மலர். இவரது கணவர் ஜெயபால் வெளிநாட்டிற்கு டூரிஸ்ட் விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய சில நாட்களில் உயிரிழந்தார். தன் கணவரை டூரிஸ்ட் விசாவில் அனுப்பிய விஜயிடம், மலர் பணத்தை திருப்பி தர கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மலரின் அக்கா மகன் விக்கி, காவல்நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், விக்கியை தாக்கியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மலர் தன் கணவரிடம் பணம் ஏமாற்றியதற்கும், தன் அக்கா மகன் தாக்கப்பட்டதற்கும் அரசிடம் நீதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்