பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய சிறப்பு போலீஸ் எலிசா - நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை அருகே திருமணம் ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு போலீஸ்காரர் கைவிட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஜெனிபா. இவரை அதே ஊரைச் சேர்ந்த சிறப்பு காவல் படை போலீஸ்காரரான எலிசா என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுவபத்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.காதலன் ஏமாற்றியதால், விரக்தி அடைந்த ஜெனிபா வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து எலிசாவை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com