மனைவியை சாலையில் தாக்கிய கணவன் - போலீசார் விசாரணை

மனைவியை சாலையில் தாக்கிய கணவன் - போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, மனைவியை சாலையில் விரட்டி விரட்டி தாக்கிய கணவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..

கொற்றிகோடு கூழக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சுபின்ராஜ்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் தங்கையுடன் சுபின்ராஜ், தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மணலிகரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகன்களை அழைத்துச் செல்ல சுபின்ராஜின் மனைவி சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சுபின்ராஜ், மனைவியை சாலையில் விரட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததால் படுகாயமடைந்த அவர் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com