

நேபாள நாட்டு பயணிகள் விட்டுச்சென்ற பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை அவருக்கு சன்மானம் வழங்கியது. ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கொடுத்த பொருட்களை, ஆய்வாளர் நாகராஜ் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட நேபாள நாட்டு பயணிகள், ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு நன்றி கூறினர்.