"அபராத தொகையில் மோசடி செய்த காவலர்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அபராத தொகையில் மோசடி செய்த காவலர்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
Published on
லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கணேஷ் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் விதிகளை மீறியதாக கூறி 200 ரூபாய் அபராதம் விதித்து, அதில் 100 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கி மீதி தொகையை தாமே வைத்துக்கொள்வதாக, கூறப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com