ஏடிஜிபி கார் முன்பு, சாலையில் தாறுமாறாக ஓடிய கார் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

மதுரையில் ஏ.டி.ஜி.பி. காரைக் கடந்து தாறுமாறாக ஓடிய காரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.
ஏடிஜிபி கார் முன்பு, சாலையில் தாறுமாறாக ஓடிய கார் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்
Published on
மதுரையில் ஏ.டி.ஜி.பி. காரைக் கடந்து, தாறுமாறாக ஓடிய காரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். மதுரை மாநகர காவல்துறை ஆணையரும், கூடுதல் காவல் துறை இயக்குனருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது, அவரது காரைக் கடந்து, தாறுமாறாக ஒரு கார், ஓடியது. இதனை கண்ட காவலர்கள் அந்த காரை நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது. இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த காரை, சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். காரில் இருந்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தனபாண்டியன் மற்றும் நாகராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com