திருச்செந்தூர் கடற்கரையில் கதற கதற ரவுடியை தூக்கி சென்ற போலீஸ்
திருச்செந்தூர் கடற்கரையில் ரவுடியை கைதுசெய்த போலீசாரை தடுத்த உறவினர்களால் பரபரப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் குடும்பத்தோடு இருந்த ரவுடியை போலீசார் கைது செய்ய சென்ற போது உறவினர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே உள்ள கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். கஞ்சா வழக்கு ஒன்றில் போலீசார் தேடிவந்த நிலையில், அவர் குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருக்கிறார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள். அப்போது, முத்துப் பாண்டியனின் குடும்பத்தினர் போலீஸாரை கைது செய்ய விடாமல் தடுத்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது..
Next Story
