கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

x

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சுகுணாபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா, கோவையை சேர்ந்த ஜான் பெட்டர், முத்து மற்றும் ராஜா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மைதானத்தில் மறைத்து வைத்து இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்