கண்ணப்பன் என்பவர் வீட்டின் கிணற்றை தூர் வாரும் பணியில், அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், காளிதாஸ், ராஜு, சேகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் சந்தோஷ் ஆகிய ஐந்து பேர் ஈடுபட்டனர். இதில் விஷ வாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன் மற்றும் காளிதாஸ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜு, சேகர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரித்த போலீசார், வீட்டின் உரிமையாளர் கண்ணப்பனை கைது செய்தனர். மகன் சந்தோஷ் உயிரிழந்த நிலையில், தந்தை கண்ணப்பனை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.