திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.