Pothigai Express | பொதிகை, நெல்லை, சோழன் எக்ஸ்பிரஸ்கள் புறப்பாடு திடீர் மாற்றம்
பொதிகை, நெல்லை, சோழன் எக்ஸ்பிரஸ்கள் புறப்பாடு திடீர் மாற்றம்
#pothigaiexpress #chozhanexpress செங்கோட்டை, சோழன் எக்ஸ்பிரஸ் புறப்பாடு மாற்றம் சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 தேதி வரை தாம்பரத்தில் இருந்தும், திருநெல்வேலி - எழும்பூர் விரைவு ரயில் மார்ச் 16ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 6 தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக அதாவது காலை10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
