கட்சி நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட் அவுட் வைக்க கூடாது என்ற தனது உத்தரவை என்றும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்த விதியை மீறுவது குறித்து கட்சியினர் நினைத்து கூட பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடியில் தன்னை வரவேற்று வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்ததாக தெரிவித்துள்ளார். பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும் பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூற உரிமை உண்டு என்றும் அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.