தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சமூக நீதிக்கு துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிற்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர் ஆகியோருக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும், இடஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், முதலமைச்சரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் தலையிட்டு சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.