வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், இந்த போராட்டம் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவே நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.