பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது
Published on
செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார். சாலவாக்கத்தை அடுத்த கலியப்பேட்டை பகுதியில், இரு நாட்களுக்கு முன்பாக பெரியார் சிலை மர்மநபர்களால், சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, அதேபகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மேற்கொண்ட விசாரணையில், பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமோதரன், பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, தாமோதரனை போலீசார் கைதுசெய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com