

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று, ஜி.கே.மணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.