கடந்த மே மாதம் பாமகவை சேர்ந்த காடுவெட்டி குரு மரணமடைந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் 73 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. இந்த இழப்புகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் இருந்து பெற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.