

பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால், பா.ஜ.க.வினர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, காரைக்குடி அண்ணா சிலை அருகே தந்தையுடன் நந்தினி 4 மணி நேரமாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கூறியதையும் மீறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.