"எங்க கோரிக்கையையும் கொஞ்சம் கேளுங்க சார்.." கோலாட்டம், கும்மி கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலைஞர்கள்

"எங்க கோரிக்கையையும் கொஞ்சம் கேளுங்க சார்.." கோலாட்டம், கும்மி கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலைஞர்கள்

"எங்க கோரிக்கையையும் கொஞ்சம் கேளுங்க சார்.." கோலாட்டம், கும்மி கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலைஞர்கள் கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகர், ஈஸ்வரன், அம்மன் உள்ளிட்ட வேடமணிந்து, கரகாட்டம் மற்றும் பம்பை மேளதாளங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ள நிலையில், அரசு இசைப்பள்ளி அமைக்க வேண்டும், நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். மேலும், அரசு விழாக்களில் பதிவு பெற்ற கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும், வீட்டுமனை மற்றும் வீடு கட்ட அரசின் திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் அலுவலக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 5 பேர் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளியே நின்ற கலைஞர்கள் கோலாட்டம் மற்றும் கும்மி அடித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com