இன்ப அதிர்ச்சி கொடுத்த டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு தொகையை, முன்தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பணை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, மற்ற அனைத்து ஊழியர்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
Next Story
