Annamalai | வைகை ஆற்றின் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள்..நேரடியாக களத்தில் இறங்கிய அண்ணாமலை

வைகை ஆற்றின் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள்..நேரடியாக களத்தில் இறங்கிய அண்ணாமலை

#annamalai #madurai #Wetheleaders #thanthitv

மதுரையில், "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் சார்பில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியை சுற்றியுள்ள வைகை ஆற்றின் கரையோரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த தூய்மைப் பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தன்னார்வலர்களும் பங்கேற்றனர். வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது மற்றும் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com