

சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியில் பணியாரக் கடை வைத்துள்ள சரோஜா என்ற மூதாட்டி, தன்னுடைய கடையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, கடை முன்பாக அறிவிப்பு பலகை ஒன்றை வைத்து அதில், பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை, பாத்திரம் கொண்டு வரவும் என அவர் எழுதி வைத்துள்ளார். அதன்படி பாத்திரங்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்குகிறார் சரோஜா, ஏழ்மை நிலையிலும் வியாபார பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழலை காக்க துடிக்கும் மூதாட்டி சரோஜாவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.